ஆற்றுத்திருவிழாவில் பலூன்களுக்கு ஹீலியம் கியாஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒரு பெண் உடல் சிதறி பலி – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுத்திருவிழாவில் பலூன்களுக்கு ஹீலியம் கியாஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒரு பெண் உடல் சிதறி பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
எதிர்பாரா இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயமடைந்தவர்கள் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
















