பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாத பலர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஆகவே, பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுபற்றி பேசிய ரேஷன் கடை ஊழியர்கள், உணவுத்துறை, கூட்டுறவுத் துறை ஆகிய இரு துறை அதிகாரிகளும் அலட்சியத்துடன் செயல்படுவதால் மீதமுள்ள கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்தனர்.
















