ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
காபூலில் அதிக வெளிநாட்டவர் வசிக்கும் ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள சீன உணவகம் அருகே பிற்பகலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன், உணவகத்தின் கட்டடம் மட்டுமின்றி, அருகிலுள்ள கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
மேலும் இந்தத் தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், உணவக ஊழியர்கள் உட்பட பல பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை கட்டுப்பாட்டில் எடுத்த தாலிபான் பாதுகாப்புப் படைகள், குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















