திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான பிரியதர்ஷினி என்பவர் தாயுடன் சேர்ந்து வீரராகவ பெருமாள் கோயில் அருகே சாலையோரம் பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இவர்களின் கடை அருகே திமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் கடை நடத்தி வரும் நிலையில், பிரியதர்ஷிணியின் கடையை எடுக்க சொல்லி ஒருமையில் பேசியதுடன், அவரை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில், பிரியதர்ஷிணியின் கையில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதல் சம்பந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண் போலீசார் தலைமறைவாக உள்ள புகழேந்தியை தேடி வருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணி தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















