சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் தென்சென்னை மாவட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆளுநர் உரை என்பது முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அரசியலமைப்பு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.
BJP தமிழுக்கு எதிரானது என்று தவறான பிம்பம் உருவாக்க முயற்சி நடக்கிறது என்றும், தமிழ்நாட்டில் நிச்சயமாக பாஜக வெற்றி வெற்றி பெறும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
















