மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து பெண் உயிரிழந்ததற்கு திமுக அரசின் அலட்சியமே காரணமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆற்றுத் திருவிழாவிற்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றார்.
இந்துக்களின் விழாக்கள் சரியாக நடக்க கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம் என்றும், வேளாங்கண்ணி திருவிழாவிற்கு மட்டும் முறையான பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்றும் சாடினார்.
















