நெல்லையில் இருந்து சென்னைக்கு வர இருந்த தனியார் பேருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்
ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து தனது பயணிகளை தாமதமாக ஏற்றிய நிலையில் அதன் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சரக்கு பொருட்களை மேற்கூரையில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களை பேருந்தின் மீது ஏற்றியதால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறியதுடன் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து தாமதமானதால் குழந்தையுடன் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
















