அமமுக பொதுச்செயலாளரும், நண்பருமான டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்திற்குத் திரும்ப முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக மக்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழரின் பெருமைக்கும் எதிராகச் செயல்படும் ஊழல் மலிந்த, திறனற்ற திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைவரும் உறுதியேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஊழல்களை மக்கள் முன் தோலுரித்துக் காட்டுவதுடன், எமது சகோதரிகள் மற்றும் மகள்களின் நலன் காக்கும் சிறந்த தலைமையையும், நல்லாட்சியையும் எமது கூட்டணி வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களுக்கு நல்வாய்ப்புகளையும், பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்வோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















