இமயமலையில் மட்டுமே பூக்கக்கூடிய ரோடோ டென்ட்ரான் பூக்கள் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் பூத்துக்குலுங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
உதகையின் முக்கிய சுற்றுலா தளமான இங்கு பல்வேறு வகையான தாவரங்கள், மூலிகை செடி வகைகள் உள்ளிட்டவை வளர்ந்து வரும் நிலையில் இமயமலை தொடரில் பூக்கக்கூடிய ரோடோடென்ட்ரான் மலர்கள் தொட்டபெட்டா மலை சிகரத்தில் பூத்துள்ளன.
இதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

















