சென்னை காட்டாங்குளத்தூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM வளாகத்திற்கு மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வருகை தந்தார். அப்போது அவர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை சந்தித்தார். பின்னர் தேநீர் அருந்திய இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக பாரிவேந்தர் தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குரூமூர்த்தியின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அவரை சந்தித்து பேசினார். இதில் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. சுமார் 2 மணி நேர சந்திப்புக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
















