அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு எந்த நாடும் பாதுகாக்க முடியாது என தெரிவித்தார். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நன்றியற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் கிரீன்லாந்து, அமெரிக்க வடக்கு பகுதியின் ஒரு அங்கம் என்றும், அதனை கையகப்படுத்த ராணுவத்தை பயன்படுத்த மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை டென்மார்க்கிடம் இருந்து கைப்பற்றுவதே தனது லட்சியம் என்றும் டிரம்ப் கூறினார்.
















