தமிழகத்தில்அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நுகர்வோர்கள், உணவு பொருட்களை வாங்கும் வசதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில், கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு இணைந்தது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்கள், எந்த ரேசன் கடைகளிலும் உணவு பொருட்களை வாங்கலாம்.
இந்தநிலையில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக, கார்டில் உள்ள முகவரியுடன் இணைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டன.
இப்பணிகள் 97 சதவீத நிறைவடைந்ததால், தற்போது, எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதி, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
















