தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தமிழ்ஜனம் செய்தி எதிரொலியாக சாலையில் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
மறவப்பட்டியில் இருந்து பாலக்கோம்பை வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல பயன்படுத்தப்படும் சாலை அமைந்துள்ளது.
அங்கு, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே சாலையில் குப்பைகழிவுகள் கொட்டப்பட்டு ஊராட்சி தூய்மை பணியாளர்களால் அகற்றப்படாமல் பல நாட்களாக தேங்கி கிடந்தது.
இதனால், துர்நாற்றம் வீசியதோடு நோய்தொற்று ஏற்படும் அச்சமும் மக்களிடையே உருவானது.
இது குறித்த செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில், கோத்தலூத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் பல நாட்களாக சாலையில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டக. இதனால் மறவபட்டி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
















