கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை துரத்தியதால், அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் சிலர், பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் காட்டு யானை உலாவி கொண்டிருந்தது. இதனை அங்கிருந்தவர்கள், செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த நிலையில் யானை, திடீரென அவர்களை துரத்தியது. இதனால் அங்கிருந்தவர்கள் தலைத்தெறிக்க ஓடினர்.
















