திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரத சப்தமி உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஜெயந்தி தினத்தன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி உற்சவம் நடைபெறுவது வழக்கம். 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா, ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மலையப்ப சுவாமி, ஏழு விதமான வாகனங்களில் மாட வீதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ரத சப்தமி உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பதிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக கீழ் திருப்பதியில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை இலவச தரிசன டோக்கன் வழங்கப்படாதென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
















