சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்
சென்னை – துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் உள்ள, துபாய்-க்கு கடந்த 30 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம் சென்னையில் இருந்து விமானங்களை இயக்கி வந்தது.
இந்தநிலையில் துபாய் நகருக்கான சேவையை வரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே ஏர் இந்திய விமான நிறுவனம், தங்களது சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் இருந்து முழுமையாக வெளியேற நினைப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
















