பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? என சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேச்சை தொடர்ந்த அதிமுக உறுப்பினர் தங்கமணி, ஆளுநர் உரையில் திமுகவின் வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும், தமிழ்நாடு போராடும் என திமுக கூறிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும், 99 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறினார்.
இந்த விவாதம் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் பிரச்னை இருக்கிறது என அவையிலேயே ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதுவும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர், இந்த விவாதம் நீண்டுகொண்டே போனதால், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதத்தை நிறுத்திய சபாநாயகர், அடுத்த தலைப்புக்கு சென்றார்.
















