மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையில் வலுவான ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.
மக்கள் விரோத திமுக அரசை அகற்றும் கூட்டணியாக NDA உருவெடுத்து உள்ளதாகவும், திமுக அரசு தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என்றும் வாசன் கூறினார்.
















