ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷமீர் மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,தோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தோர் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது எனவும் துணிச்சலான வீரர்களை நாம் இழந்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் சேவை எப்போதும் நினைவு கூரப்படும் என பிரதமர் மோடி தனது எக்ஸ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
















