கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகம் வழியாக செல்லும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அந்த ரயில் தமிழக எல்லையான குழித்துறை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
















