பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் ரயிலை, வள்ளியூரில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி மூன்று அம்ரித் பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் ஒரு ரயில் திருவனந்தபுரம் முதல் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரையின் முயற்சியால், நெல்லை வள்ளியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வள்ளியூருக்கு முதன் முதலாக வந்த இந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு மலர்தூவி அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். மேலும், ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலை மலர்தூவி பொதுமக்களும், பாஜகவினரும் வரவேற்றனர்.
















