தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வரும் 31ஆம் தேதியும், தைப்பூச பெருவிழா பிப்ரவரி ஒன்றாம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுமார் 100 அடி உயரம் கொண்ட கொடி மரத்தில் சிறப்பு பூஜைகளுடன் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
















