ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பில்லவாா் பகுதியில் ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில், பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த கமாண்டா் உஸ்மான் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து நவீன ஆயுதங்கள், M4 தானியங்கி துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















