போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த போர் நிறுத்த திட்டத்தின் 2ம் கட்டமாக காசா அமைதி வாரியம் அமைக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இதில் சேர 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணையும் நாடுகள் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது.
டிரம்ப் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் அமைதி வாரியத்தில் சேர சம்மதம் தெரிவித்தனர்.
















