கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது ஸ்வாநிதி கிரெடிட் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய பிரதமர் மோடி, இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள தெரு வியாபாரிகள் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என கூறினார்.
ஸ்வாநிதி கடன் அட்டை என்பது மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ வசதி இணைக்கப்பட்ட RuPay கிரெடிட் கார்டு ஆகும்.
இது டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், விற்பனையாளர்களின் அன்றாட பணப்புழக்கத் தேவைகளை நிர்வகிக்க உதவும் வகையில் வட்டி இல்லாத கடனை வழங்குகிறது.
தவணைகளை சரியாக செலுத்துபவர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஸ்வநிதி அட்டை மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுக்கு 1200 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கவும் ஸ்வாநிதி கடன் அட்டை வழிவகை செய்கிறது.
















