சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்
திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது என கூறியுள்ளார்
திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம் எனவும் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்
சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்
















