சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் விதமாக மாங்காட்டில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகளையோ, திரைப்பட நடிகர்களையோ மாணவர்கள் முன்மாதிரியாக எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.
















