வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு செல்வதற்காக கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான கைலாஷி யாஷ் பாஜ்பாய் என்பவர் சமீபத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணித்துள்ளார்.
அப்போது ரயில் பயணிகள் தங்களது செல்ல பிராணிகளை கொண்டு செல்வதற்காக, வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதை அவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.
அதில், செல்லப் பிராணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்க தனித்தனி ஹோல்டர்கள் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், செல்லப் பிராணிகளை கொண்டு செல்லும் வசதியை பயன்படுத்த முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கைலாஷி விளக்கினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், செல்லப் பிராணிகளை கொண்டு செல்ல வசதி ஏற்படுத்திய ரயில்வே துறையினை பலரும் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை, வேகமான பயணங்கள் மற்றும் மேம்பட்ட வசதிகளை விரும்பும் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
















