காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, 28 மாவட்டங்களில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
7 மாவட்டங்களில் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பண்டிகை காலங்களில் ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்யும் தமிழக அரசுக்கு திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த விவகாரத்தில் இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
















