சிஏ படிப்பு கடினமான நடைமுறைகளைக் கொண்டது என்பது தவறான கருத்து என இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் செங்கல்பட்டு மாவட்ட கிளை தொடங்கப்பட்டுள்ளது.
சார்டட் அக்கவுண்டண்ட் மற்றும் ஐ.சி.டபுல்யூ.ஏ போன்ற உயர்கல்வி பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் ஐ.சி.ஏ.ஐ நிறுவனத்தின் தலைவர் சரன்ஜோத் சிங் நந்தா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைத் தலைவர் பிரசன்ன குமார், சிஏ படிப்பு என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானது அல்ல என்றும்,
இன்று ஒரு குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க ஆகும் மொத்த செலவு மிகவும் குறைவுதான் என்றும் கூறினார்.
















