கோவை குப்பனூர் அருகே சேற்றில் சிக்கியிருந்த யானையை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்டனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக்காட்டு யானை பேரூர், குப்பனூர், தீத்திபாளையம், கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த நிலையில் குப்பனூரில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த சேற்றுப்பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியது.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகனத்தை வைத்து சரிவு பாதையை ஏற்படுத்தினர்.
பின்னர் கயிறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு யானையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே மூன்று நாட்களாக யானை சுற்றித்திரிவதை தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
















