திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கலந்துகொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைத்து வருவதாகவும், இந்துக்களுக்காக வாதாடுவதற்கு தலைசிறந்த வழக்கறிஞர்கள் இல்லை எனவும் கூறினார்.
















