கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையை தீ வைத்து எரித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், திரிபுரா முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிப்லப் குமார் தேப் உரையாற்றினார்.
அப்போது அருகில் உள்ள கிளப்பில் அதிக சத்ததுடன் பாடல் ஒலிபரப்பியதை பாஜகவினர் தட்டிக் கேட்டனர். இதையடுத்து பாஜக மேடை அமைக்கப்பட்ட இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், தங்கள் கட்சி கொடியை நட்டதாக தெரிகிறது.
அதனை பாஜகவினர் தடுத்த நிலையில் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடைக்கு TMC தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில பாஜக, மேற்குவங்கத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர் உரையாற்றிய மேடை எரிக்கப்பட்டிருப்பது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
















