சேலத்தில் உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்!
சேலம் எடப்பாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திய இரண்டு உலக சாதனைகளை, நான்கு நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன.
எடப்பாடி அருகே குறும்பப்பட்டியில் யுனிவர்செல் கல்வி நிறுவனம் சார்பில் இரண்டாயிரத்து ஐநூறு மாணவ, மாணவிகள் பங்கேற்று, தூய்மை மற்றும் செல்போன் பயன்பாடு குறித்து இரண்டு சாதனைகளை நிகழ்த்தி அசத்தினர்.
மாணவ, மாணவிகளின் இந்த சாதனைகளை எலைட் உலக சாதனைகள், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் அங்கீகரித்து, உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கின.
















