சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
மேச்சேரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பிரசாந்த் மற்றும் அவரது தாய் சாரதா ஆகியோர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதன் எதிரொலியாக அவர்கள் நடத்தி வந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சாரதா மற்றும் அவரது மகன் வினோத்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், திமுக நிர்வாகி பிரசாந்தை தேடி வருகின்றனர்.
















