பாகிஸ்தானை கைவிட்ட ஐக்கிய அரபு அமீரகம் - வெறும் 3மணிநேரம் இந்தியா வந்த UAE அதிபர்..சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை கைவிட்ட ஐக்கிய அரபு அமீரகம் – வெறும் 3மணிநேரம் இந்தியா வந்த UAE அதிபர்..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 27, 2026, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. அமீரக அதிபர் அண்மையில் இந்தியாவிற்கு வந்து மோடியை சந்தித்து பேசிய அடுத்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவிகளை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளுடனும், பிற இஸ்லாமிய தேசங்களுடனும் வர்த்தக மற்றும் ராணுவ உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, அந்த இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினாலும், மற்ற நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும். அதேபோல, லிபியாவுடனும் பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. எல்என்ஜி சரக்குகளை வாங்குவது தொடர்பாக கத்தாருடனும் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அந்த வரிசையில், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

பல தசாப்தங்களாகவே பாகிஸ்தானின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும், அந்நியச் செலாவணியின் ஆதாரமாகவும் ஐக்கிய அரபு அமீரகம் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வேலை சார்ந்தும், சுற்றுலாவுக்காகவும் அமீரகத்திற்கு பயணித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரசு அமீரகம் அண்மையில் முன்வந்திருந்தது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சவாலான சூழலில் விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் UAE-க்கு உண்டு. எனவே, அந்நாட்டுடனான ஒப்பந்தத்தால் பாகிஸ்தானின் விமான போக்குவரத்து புதிய உயரத்தை எட்டும் நிலை நிலவியது.

இந்த சூழலில்தான், கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.

வெறும் 3 மணிநேரம் மட்டுமே டெல்லியில் இந்த அவர், மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில நாட்களில், இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது.

இதனை, பாகிஸ்தானின் The Express Tribune செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைவதில் அமீரகத்திற்கு விருப்பம் இல்லை எனவும், அதனால் அடுத்தக்கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உடனான உறவை அமீரகம் விரும்பாததால்தான், ஒப்பந்தத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமீரக அதிபர் வெறும் 3 மணிநேரம் இந்தியா வந்ததற்கே, பாகிஸ்தானின் முக்கிய ஒப்பந்தம் கைவிட்டு போய்விட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 3 நாள் பயணமாக தற்போது இந்தியா வந்துள்ளனர். இதனால், பாகிஸ்தான் வேறு என்ன இழப்பை சந்திக்க போகிறது என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிய வரும்.

Tags: Operation Sindoorrecently visited IndiawithdrawnIslamabad International AirportpakistanairportUAE PresidentUnited Arab Emirates
ShareTweetSendShare
Previous Post

அதிமுக அணியாக மாறி வரும் திமுக – நிர்வாகிகள் புலம்பல்!

Next Post

விஜய் நடித்த ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies