ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் கருவறை புகைப்படங்கள், வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பித்ருக்களின் பாவங்களை போக்கும் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் செல்போன்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் சென்ற வடமாநிலத்தவர் சிலர், ராமநாதசுவாமி கோயிலின் கருவறையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள பக்தர்கள், தடையை மீறி செல்போன் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
















