சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த விமான நிலைய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் இருந்து வெளிநாடு செல்லக்கூடிய விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
















