தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது மட்டுமின்றி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதுகாப்பு கருதி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் மீது ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட அறிவுறுத்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பக்தர்களின் அலங்கார ஊர்தி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
















