இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடந்தது.
ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை நின்று போனது.
இந்த நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















