இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!
Jan 28, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து – அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடந்தது. ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை நின்று போனது.

இந்த நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக இந்தியா வந்த ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. பின்னர், இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பேசிய பிரதமர் மோடி, சிக்கலான உலகளாவிய சூழலில், பகிரப்பட்ட வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை உலக வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கிய இணைப்பாக மாற்ற இரு தரப்பும் உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், குடியரசு தின விழாவுக்கு தன்னை அழைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா, இந்தியா வெற்றியடையும் போது, உலக நாடுகள் பாதுகாக்கப்படும் எனவும், நிச்சயத்தன்மையற்ற உலகில் நமது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்

Tags: PM ModiIndiaEuropean Union
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் மரணம்!

Next Post

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

Related News

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து – அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!

மகாராஷ்டிரா நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் மரணம்!

பட்ஜெட் கூட்டத்தொடர்- குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

சீன அணு ஆயுத ரகசியத்தை CIA-க்கு விற்றதாக குற்றச்சாட்டு – ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி? சிறப்பு தொகுப்பு!

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies