அஜித் பவாரின் அகால மரணம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை கொண்ட மக்கள் தலைவராக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என பேரார்வம் கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார். அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை கொண்ட மக்கள் தலைவராக திகழ்ந்தவர் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் பவாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுளளார்.
தமிகக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய அளவில் NDA கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.
















