விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் என தவெக தலைவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் அல்ல, விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்,.
“விஜய் யாருடனும் சேர்ந்துவிட்டால் அவரது சுயம் போகிவிடும் என்று மக்கள் கூறுகின்றனர் என்றும், பாரம்பரிய வரலாறு உள்ள ஒரு கட்சி இன்று தேய்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்த கட்சி இன்று தேய்ந்துவிட்டது என்றும், காங்கிரசுக்கு தற்போது பவர் இல்லை, அந்த பவரை தவெக கொடுக்க நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங். பவருக்கு வந்தால் மீண்டும் வரலாறு படைக்கும்; காங். வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்தார்.
















