சென்னை அடையாறில் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடையாறில் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்ற இளைஞர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது மனைவி புனிதா குமாரியை பீகார் மாநிலத்தை சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தட்டிக்கேட்ட கவுரவ்குமாரை அந்த கும்பல் படுகொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி, இந்திரா நகர் சாலையில் கடந்த திங்கட்கிழமை வீசிச்சென்றது. கவுரவ்குமாரின் மனைவி புனிதா குமாரி மற்றும் மகளையும் அவர்கள் கொலை செய்துள்ளனர்.
குழந்தையின் உடலை பக்கிங்காம் கால்வாயிலும், புனிதாகுமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கிலும் அவர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், புனிதாகுமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் தேடி வருகின்றனர்.
















