இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, அமெரிக்காவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சரியான பதிலடி என கனடா வரவேற்றுள்ளது…
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா….
கடந்த 2007ம் ஆண்டு தொடங்கிய பேச்சுவார்த்தை, 2013ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது… இந்த சூழலில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், 2022ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த இந்தியா, அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது….
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது முக்கிய மைல் கல்லாகவும், வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது…. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் உலகின் 2வது மற்றும் நான்காவது பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை சிலாகித்துள்ளது..
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாக இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சிக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்நாடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார். ஆனால் என்ன நடந்தது, அவரது மிரட்டலுக்கு அடிபணியாத ஐரோப்பிய யூனியன், இந்தியாவுடன் வர்த்தக ரீதியாக கை கோர்த்து, அமெரிக்காவுக்கு டிரம்ப் பாணியிலேயே பதிலடியை கொடுத்துள்ளது..
140 மக்கள் தொகை கொண்ட இந்தியாவும், 50 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் 25 சதவிகித்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன…
உலக வர்த்தகத்தில் இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும் 12 சதவிகிதமாக உள்ளது.. \இந்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தாலும், வரியை ஆயுதமாக பயன்படுத்தும் அமெரிக்காவுக்கு ஷாக் அளிப்பதோடு, சர்வதேச வர்த்தக சமநிலையை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், அவரது குரலாக ஒலித்திருக்கிறார் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட்….
இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதன் மூலம், ஐரோப்பிய யூனியன் தங்களுக்கு எதிரான ஒரு போருக்கு நிதியளிப்பதாக ஸ்காட் பெசன்ட் விமர்சித்துள்ளார்…
ரஷ்யா உடனான எரிசக்தி உறவுகளை ஐரோப்பா படிப்படியாக முறித்துக் கொண்டிருக்கலாம்,
ஆனால், இந்தியாவிடம் இருந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஐரோப்பிய யூனியன் மறைமுகமாக நிதியளிக்கிறது என்று பழைய வாய்ப்பாட்டையே பாடி காட்டினார் ஸ்காட் பெசன்ட்… மாஸ்கோவின் எரிசக்தி வர்த்தகத்தை சீர்குலைக்க வாஷிங்டன் அழுத்தம் கொடுத்தாலும், ஐரோப்பிய யூனியன் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியாக தொடர்ந்து பயனடைவதாக ஸ்காட்பெசன்ட் குறை கூறினார்.. அவரது இந்த வாதம் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக உறவால் ஏற்பட்டுள்ள வயிற்றெரிச்சலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது..
அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கனடாவோ, இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.
கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்க்சன், டிரம்பை மறைமுகமாக தாக்கிப் பேசியதோடு, இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரிகளை ஆயுதமாக பயன்படுத்தும் உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பல்வேறு நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை வரவேற்று வருகின்றன… நீண்ட காலமாக எதிர்ப்பார்க்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்னும் ஓராண்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியாவிலும், ஐரோப்பிய யூனியனிலும் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் இதன் மூலம் பயன்பெறும் என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் கருத்து…
















