தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!
Jan 29, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், அரசுத் துறைகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று, திமுக  தேர்தல் வாக்குறுதி  அளித்திருந்ததாக கூறியுள்ளார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி வேண்டுகோள் வைத்த மருத்துவத் துறை ஒப்பந்த ஊழியர்களை, “தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டது” என்று அமைச்சர் . மா. சுப்பிரமணியன்.கொச்சைப்படுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலங்களிலும், தங்கள் உயிர் குறித்துக் கவலைப்படாமல், மக்களுக்காக உழைத்த மருத்துவத் துறை ஊழியர்களை அவமானப்படுத்திய அவருக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில், அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களை, அவமானப்படுத்துவது திமுகவின் வழக்கமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தால், கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகளில் பத்து சதவீதம் கூட நிறைவேற்றாமல், 2026 தேர்தலுக்கு, மீண்டும் ஒரு ஏமாற்றுக் கூட்டத்தை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க அமைத்திருப்பார் முதலமைச்சர்  ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: medical professionalsDMKMinister Ma. SubramanianBJP National General Council member AnnamalaiMinister Ma. Subramanian's statement
ShareTweetSendShare
Previous Post

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

Next Post

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

Related News

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட பதிவுகள் நீக்கம் – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies