பெங்களூரு விமான நிலையத்தில், தனது பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக விளையாட்டாக கூறிய விமான பயணியை போலீசார் கைது செய்தனர்.
கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த அபு அகீல் அசார்சாத் என்பவர், தான் பயணிக்க இருந்த விமானத்திற்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர், தனது பையில் 2 வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவித்தார். இதனை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள்,
அவரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் விளையாட்டாக கூறி அச்சுறுத்தியது தெரியவந்ததால் அவரை கைது செய்த சி.ஐ.எஸ்.எப் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















