மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதிய தொகையை அதிகாரிகள் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களின் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள 535 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் அதிகாரிகள் 270 ரூபாய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் கையுறைகள், சீருடை போன்றவை கிடைப்பதில்லை எனவும், அதனை சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
















