திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர்நீத்த பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக பாஜகவின் அயலக பிரிவு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்தினருக்கு பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் ஆறுதல் தெரிவித்த நிலையில், பாஜக சார்பில் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜகவின் அயலக பிரிவு சார்பில் மீண்டும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.
பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், அயலக தமிழர் பிரிவு மாநிலத் தலைவர் கே.எம்.சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அப்போது பேசிய ராம சீனிவாசன், இதுவரை திமுக கவுன்சிலர்கூட வந்து ஆறுதல் தெரிவிக்காதது வேதனை அளிப்பதாகவும், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு உதவி செய்த தமிழக அரசு, பூர்ண சந்திரனின் குடும்பத்தை கண்டுகொள்ளாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
















