தமிழ் மன்னர்கள் குறித்து அவதூறாக பேசிய திருமாவளவனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் மன்னர்களை INDI கூட்டணியினர் இழிவுபடுத்துவதாகவும். தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய மன்னர்களை தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை தமிழகம் ஏற்காது எனவும் கூறியுள்ளார்.
ஒருபுறம் சோழ மன்னர்களுக்கு NDA அரசு சிலையெழுப்பி அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது எனவும், மறுபுறம் INDI கூட்டணி கட்சியினர் மாமன்னர்களை தமிழின எதிரிகள்போல சித்தரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பெருமைமிக்க மன்னர்களின் புகழை கெடுத்து அரசியல் ஆதாயம் தேடும் கொடிய முயற்சியை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















